Latest News :

‘பாண்டிமுனி’ படத்திற்காக ரூ.50 லட்சத்தில் பிரம்மாண்ட செட் போட்ட கஸ்தூரிராஜா
Monday October-15 2018

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது.

 

இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர், சுமன் ஆகியோர்  நடிக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவு - மது அம்பட், இசை  - ஸ்ரீ காந்த்தேவா, நடனம் - சிவசங்கர், சண்டை பயிற்சி - சூப்பர்சுப்பராயன், எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா.

 

படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் கஸ்தூரிராஜா கூறுகையில், “திருவண்ணாமலை அருகே வேட்டவலம்  ஜமீனுக்கு  சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்த குளம்  இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு தூண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட  அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகள் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினோம்.

 

Pandi Muni

 

அத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்திரதாண்டவ கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப் பட்டது. அதில் அகோரிகள் வலம் வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டது.

 

கைலாயத்தை பிரதி எடுத்தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். சுமார் 50 லட்சம் ரூபாயை இதற்காக செலவு செய்திருக்கிறோம்.

 

என் சினிமா பயணத்தில் பாண்டிமுனி படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது.” என்றார்.

Related News

3602

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery