Latest News :

’வட சென்னை’ இந்த படத்தின் காப்பியா? - பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்
Tuesday October-16 2018

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக உள்ள ‘வட சென்னை’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பாகங்களாக வெளியாக உள்ள இப்படம் வட சென்னையின் 30 ஆண்டுகால வரலாறு தான் இப்படத்தின் கதை.

 

கேரம்போர்ட் விளையாட்டில் சாதிக்க நினைக்கும் இளைஞர் எப்படி பெரிய டானாகிறான் என்பது தான் கதை. இதில் இயக்குநர்கள் அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், இதுபோன்ற ஒரு படம் ஏற்கனவே வெளியாகியுள்ளதாகவும், அப்படத்திலும் கேரம்போர்டில் சாதிக்க நினைக்கும் இளைஞன் எப்படி டானாகிறான் என்பதை காட்டியிருப்பதாகவும் நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

 

இது குறித்து சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த கதையில் ஏற்கனவே நான் ஒரு படத்தில் நடித்துள்ளேன். அதுவும் கேரம் விளையாடுபவர் பெரிய தாதாவாக மாறுவது தான். ஆனால் வெற்றிமாறன் கண்டிப்பாக தன்னுடைய மேஜிக்கை காட்டியிருப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Sidharth

 

’வட சென்னை’ இந்தியில் வெளியான படத்தின் காப்பி என்று சித்தார்த் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், நாசுக்காக இந்த கதையம்சம் கொண்ட படம் வெளியாகியிருக்கிறது என்று மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

 

இருப்பினும், தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணிக்கு என்று தனி ஸ்டைல் இருக்கிறது, அந்த வகையில் ‘வட சென்னை’ நிச்சயம் ரசிகர்களுக்கு மற்றும் இன்றி திரையுலகிற்கு புதுசாக தான் இருக்கும்.

 

Related News

3604

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery