‘மொழி’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் ராதா மோகன் - நடிகை ஜோதிகா கூட்டணி ‘காற்றின் மொழி’ திரைப்படத்தின் மூலம் இணைந்திருப்பதால், இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘காற்றின் மொழி’ படக்குழுவினர் பாடல் எழுதும் போட்டி ஒன்றை சமீபத்தில் நடத்தினார்கள். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 700 பேர் பங்கேற்றார்கள். இவர்களில் 66 பேர் தேர்வான நிலையில், இவர்களுடன் ‘காற்றின் மொழி’ படக்குழுவினர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் நடத்தினார்கள்.
இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் ராதாமோகன், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் ‘காற்றின் மொழி’ பட பாடல் சிடி வழங்கப்பட்டது. மேலும், சிறப்பாக பாடல் எழுதிய இருவருக்கு பரிசு வழங்கப்பட்டது. பாடலாசிரியர் மதன் கார்க்கி, ‘காற்றின் மொழி’ படத்தின் தான் பாடல் எழுதிய அனுபவத்தை நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார்.
பாப்டா நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன் தயாரித்திருக்கும் ‘காற்றின் மொழி’ விரைவில் வெளியாக உள்ளது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...