விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சண்டக்கோழி 2’ வரும் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது. முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் இருக்கும் என்பது படத்தின் டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.
இதில், விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷுன் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பெரிய அளவில் பேசப்படுவதோடு, வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமியின் வேடம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘சண்டக்கோழி 2’ வில் முன்னணி நடிகர் ஒருவர் பணியாற்றியுள்ளார். இதுநாள் வரை இதை ரகசியமாக வைத்திருந்த படக்குழு தற்போது அது யார்? என்பதை தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து இயக்குநர் லிங்குசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”சண்டக்கோழி-2”வில் வாய்ஸ் ஓவர் கொடுத்ததற்காகவும் இப்படக்குழுவில் இணைந்தமைக்காகவும் கார்த்திக்கு எனது சிறப்பு நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.
ஆம், ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிகர் கார்த்தி பின்னணி குரல் கொடுத்திருக்கிரார். அதேசமயம், பின்னணி குரல் கொடுத்த கார்த்தி படத்திலும் தோன்றிருப்பாரோ, என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...