Latest News :

கல்யாண் மீதான பாலியல் புகார் பொய்யானது! - சின்மயின் தவறால் நடந்த குழப்பம்
Tuesday October-16 2018

பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதோடு மேலும் பல பிரபலங்கள் மீதும் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

 

வைரமுத்துவால் தான் பாதிக்கப்பட்டேன், அது உண்மை தன்னைப் போல மேலும் பல பாடகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறும் சின்மயி, சமூக வலைதளங்களில், யார் யாரோ, பதிவிடும் பதிவுகளை, அது உண்மையா? அந்த நபர் யார்? என்ற எதையுமே ஆராயாலம், ரீட்வீட் செய்வதோடு, அந்த பதிவுகளை தனது சமூக வலைதளப் பக்கத்திலும் வெளியிடுகிறார். 

 

சின்மயின் இத்தகைய செயலால், எந்த தவறும் செய்யாத நடன இயக்குநர் கல்யாண் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். இலங்கை பெண் ஒருவர் கல்யாண் மீது பாலியல் புகார் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை சின்மயி ரீட்வீட் செய்ததால், இது வைரலாக பரவியது. இதனால், கல்யாண் மாஸ்டரின் குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்பட, திடீரென்று கல்யாண் மாஸ்டர் மீதான் பதிவு பொய்யானது என்ற தகவல் தெரிய வந்துள்ளதால், இந்த விவகாரத்தில் சின்மயி பின்வாங்கினார்.

 

இதற்கிடையே, நடன இயக்குநர் கல்யாண் மீது புகார் தெரிவித்த நபர், ”சின்மயியின் ட்வீட்டுகளால் என்ன நடக்கிறது என்பதை பார்க்க, காரணமே இல்லாமல் கல்யாண் மாஸ்டர் மீது புகார் தெரிவித்தது நான் தான். உங்களின் பெயரை பயன்படுத்தியதற்காக சாரி” என்று  ட்வீட் செய்திருக்கிறார். இதை கல்யாணும் ரீட்வீர் செய்திருக்கிறார்.

 

மேலும், தனக்கு வரும் பதிவுகளை எந்த கேள்வியும் கேட்காமல், அப்படியே அதை சின்மயி போஸ்ட் செய்கிறார். அதனால் அவரின் ஆதாரமற்ற பதிவுகளை நம்ப வேண்டாம். ஆண்களை அசிங்கப்படுத்த பெணியவாதிகள், இந்த மீ டூ டிரெண்டை பயன்படுத்துகிறார்கள். என்று கல்யாண் மீது புகார் தெரிவித்தவர் தெரிவித்திருக்கிறார்.

 

Chinmayi

 

”விளையாட்டுக்கு புகார் தெரிவிப்பதற்கு நான் தான் கிடைத்தேனா” என்று அந்த நபரிடம் கேள்வி எழுப்பிய கல்யாண், இது தொடர்பான பதிவுகளை தயவு செய்து மீடியாக்களுக்கு அனுப்புமாறும் கேட்டுள்ளார்.

 

இந்த விஷயத்தில், கல்யாண் மீது பரவும் புகார் பொய்யானது, என்பதை ஒப்புக்கொண்ட சின்மயி, “இப்படி ஒருவர் மீது பொய்யான தகவல் பரவுவதை ஏற்க முடியாது” என்று டிவீட்டியதை பார்த்த அந்த நபர், ”நீங்கள் தான் அவர் பற்றி வந்த ட்வீட்டை சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்தது. உங்களின் புகார்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது. நீங்கள் தான் அதற்கு பொறுப்பு. என் கடமை என்பதால் உண்மையை சொன்னேன். அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது.” என்று பதிவிட்டுள்ளார்.

 

இப்படி, எதையும் ஆராயாமல் சின்மயி ஷேர் செய்யும் இதுபோன்ற தவறான பதிவுகளால் நடன இயக்குநர் கல்யாண் பாதிக்கப்பட்டது போல, எத்தனை பேர் பாதிக்கப்பட போகிறார்களோ!

Related News

3609

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery