விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜயின் பேச்சால் படத்தின் மீது இருந்த எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்த நிலையிவ்ல், 19 ஆம் தேதி டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்ததால், விஜய் ரசிகர்கள் இப்போதே தீபாவளி மோடுக்கு வந்துவிட்டார்கள்.
இந்த நிலையில், ‘சர்கார்’ டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஏதோ அரங்கில் எல்.இ.டி ஸ்கீரினின் ஓடும் டீசரை மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இதை விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
அதே சமயம், சிலர் இந்த டீசர் போலியானது, என்றும் கூறுகிறார்கள். ஆனால், படக்குழு இதுவரை இந்த டீசர் குறித்து இன்னும் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், 19 ஆம் தேதில் வெளியான டீசரை பார்த்த பிறகு தான் இது போலியா, அல்லது உண்மையான டீசரா என்று உறுதி செய்ய முடியும்.
இதோ அந்த டீசர்,
#Sarkar teaser leaked#Vijay #Thalapathy #SarkarTeaser @sunpictures @arrahman @ARMurugadoss @KeerthyOfficial pic.twitter.com/vftp5szbvQ
— CinemaInbox (@CinemaInbox) October 16, 2018
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...