சில தெலுங்குத் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் ஸ்ரீரெட்டி, தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குநர்கள் பலர் தன்னை பயன்படுத்திக் கொண்டார்கள் என்று கூறியதோடு, சில பெயர்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஸ்ரீரெட்டியின் புகாரை தொடர்ந்து மேலும் சில தெலுங்கு குணச்சித்திர நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்தார்கள்.
மேலும், தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் மீதும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டியை தான் சந்தித்தது கிடையாது. அவர் பட வாய்புக்காக தானே இப்படி பேசி வருகிறார். உண்மையாகவே அவருக்கு திறமை இருந்தால், நான் அவருக்கு வாய்ப்பு தர தயார், என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் தனது புதிய படத்தில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தந்திருப்பதோடு, அதற்கான அட்வான்ஸையும் கொடுத்துவிட்டதாக, ஸ்ரீரெட்டி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் செட்டிலாகியிருக்கும் ஸ்ரீரெட்டி, தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் அவர் நடித்து வரும் நிலையில், ராகவா லாரன்ஸ் படத்திலும் வாய்ப்பை பெற்றுவிட்டார்.
மொத்தத்தில், ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் தனது புகார் மூலம் சாதிக்காததை தமிழ் சினிமாவில் சாதித்துவிட்டார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...