61 வது படமாக உருவாகி வரும் ‘மெர்சல்’ படத்தில், தனது 60 படங்களில் செய்யாத ஒன்றை விஜய் செய்துள்ளார். இது ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகின்றனர்.
ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படமாக உருவாகும் ‘மெர்சல்’ படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அட்லி இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என்று மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பெரும் வரவேற்பு பெற்றதோடு, பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தீபாவளிக்கு ரிலிஸாக உள்ள இப்படத்தின் புரோமோஷன்கள் அனைத்திலும் புதுமையை மேற்கொள்ள முடிவு செய்துள்ள தயாரிப்பு தரப்பு, ‘மெர்சல்’ படத்தின் தீம் பாடல் ஒன்றையும் உருவாக்கி வருகிறதாம்.
இதுவரை விஜயின் எந்த படத்திற்கும் தீம் பாடல் வெளியிடப்படாத நிலையில், ‘மெர்சல்’ படத்திற்காக முதல் முறையாக தீம் பாடல் வெளியிடப்பட உள்ளது. இந்த பாடலில் சென்னை ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த வரிகள் இடம்பெறுவதுடன் விஜயின் வெற்றிகளையும் சொல்லியிருக்கிறார்களாம்.
ரசிகர்களின் விருந்தாக மட்டும் இன்றி சினிமா ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் விதத்தில் உருவாகி வரும் இந்த தீம் பாடலை விரைவில் வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...