கவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த பாலியல் புகாரால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவு தெரிவிப்பதை போல பலர், வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பேசி வருவதோடு, சின்மயி இப்படி வைரமுத்து மீது கூறும் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், சின்மயி வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்ததற்கு அவரை பாராட்டியுள்ள பிரபல பின்னணி பாடகர் மலேசிய வாசுதேவனின் மருமகளும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான மாலினி, வைரமுத்து பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மாலினி, தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், தான் பிரபல இசை தொலைக்காட்சியில் பணியாற்றிய போது, இளம் பெண்ணிற்கு வைரமுத்து தொல்லை கொடுத்ததாகவும், இது பற்றி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே தான் பல மேடைகளில் பேசியிருப்பதாகவும், அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது ஏன் கூற வேண்டும்? என்று சின்மயிடம் கேள்வி எழுப்புகிறவர்கள், குற்றம் சாட்டப்பட்டவரிடம் மட்டும் ஏன் கேள்வி கேட்பதில்லை, என்று கேட்டிருக்கும் மாலினி, சின்மயின் இத்தகைய செயலை, தைரியமான நடவடிக்கை, என்றும் பாராட்டியுள்ளார்.
இதோ அவரது பதிவு,
https://www.facebook.com/haymamalini/posts/10156156912428752
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...