சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜீனியஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 26 ஆம் தேதியன்று வெளியாக உள்ள நிலையில், கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ‘சாம்பியன்’ என்ற படத்தை அவர் இயக்கி வந்தார்.
இதில் புதுமுகம் ரோஷன், மிர்னலினி நாயகன், நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ஜி.கே ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயபிரகாஷ், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரோல் குரொலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பில் கே.ராகவி தயாரித்திருக்கும் இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதற்கிடையே, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இன்று படத்தின் டப்பிங் பணி தொடங்கியிருக்கிறது. அதேபோல், சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படமான ‘ஏஞ்சலினா’ படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்த அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஜீவா’ என விளையாட்டை மையமாக வைத்து இரண்டு வெற்றிப் படங்களை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...