பண்டிகை என்றாலே பல விதத்தில் கொண்டாட்டம் கலைக்கட்டும் என்றால், புது திரைப்படங்களின் ரிலீஸும் மக்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தைக் கொடுக்கும். அதற்காகவே முன்னணி ஹீரோக்களின் படங்களை பண்டிகை காலங்களில் வெளியிடுவது தமிழ் சினிமாவின் எழுதப்படாத வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில், இந்த தீபாவளி பண்டிகைக்கு விஜயின் ‘சர்கார்’ படம் வெளியாவதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும், விஜய் படம் வெளியாகும் போது வேறு ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகததால், இந்த தீபாவளி விஜய் ரசிகர்கள் கையில் என்றாகிவிட்டது.
இதற்கிடையே, நேற்று மாலை வெளியான ‘சர்கார்’ பட டீசர், பல சாதனைகளை நிகழ்த்தி வர, ரசிகர்களும் டீசரை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், கொண்டாட்டத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தீபாவளிக்கு விஜய்க்கு போட்டியாக ரஜினியையும் களம் இறக்க உள்ளார்கள்.
ஆம், ’சர்கார்’ வெளியாகும் இந்த வருட தீபாவளியன்று பிரபல தொலைக்காட்சியில் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்களாம். டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக அந்த தொலைக்காட்சி இதனை செய்தாலும், தியேட்டரில் விஜய் படம் வெளியாக, டிவி-யில் இப்படி ஒரு படத்தை ஒளிபரப்பினால், ரஜினி - விஜய் என்று இருவருக்கும் பொதுவாக இருக்கும் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் போகமால் டிவி முன்பு உட்கார்ந்து விடுவார்களோ, என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளார்களாம்.
இருந்தாலும், தற்போது தமிழகத்தை பொறுத்தவரை பெரிய மாஸ் உள்ள நடிகர் என்றால் அது விஜய் என்றாகிவிட்ட நிலையில், ‘சர்கார்’ நிச்சயம் சாதிக்கும் என்றே விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி, திரைத்துறையினரும் நம்புகிறார்களாம்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...