’சர்கார்’ படத்தின் மூலம் விஜய், ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். இவர்கள் இருவரது கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், ‘சர்கார்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், படத்தின் கதை அரசியல் பின்னணியைக் கொண்டது என்பதாலும், படம் குறித்து இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பரபரப்பான பேச்சாலும், விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி ஒட்டு மொத்த தமிழகமே ‘சர்கார்’ படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, நேற்று வெளியான ‘சர்கார்’ படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பலவிதமான சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது.
அதாவது, சர்கார் டீசர் வெளியான 10 நிமிடங்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள். மேலும், 20 நிமிடத்தில் 20 லட்சமும், 35 நிமிடத்தில் 30 லட்சமும், 55 நிமிடத்தில் 40 லட்சமும், 75 நிமிடத்தில் 50 லட்சமும், 1 மணி 50 நிமிடத்தில் 60 லட்சமும், 2 மணி 30 நிமிடத்தில் 70 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர் பார்த்து சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...