இத்தாலி நாட்டில் அரசியல் மற்றும் தத்துவியல் படித்து வரும் பிரபல இயக்குநர் மணிரத்னம் - நடிகை சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், பிரச்சினையில் சிக்கியுள்ளார்.
நந்தனிடம் இருந்த பணம் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் சிலவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அவர் தன்னம் தனியாக பரிதவித்துள்ளார்.
இந்த விஷயத்தை அவர் தனது அம்மா சுஹாசினிக்கு தெரியப்படுத்தியதும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது மகன் பிரச்சினையில் சிக்கியுள்ளார், யாராவது வெனிஸ் மார்க் சதுக்கம் பக்கம் இருந்தால் அவருக்கு உதவி செய்யுங்கள், என்று தெரிவித்திருந்தார். இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், சில மணி நேரங்களுக்கு பிறகு, தனது மகன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு உதவிய நல் உள்ளங்களுக்கு எனது நன்றிகள், என்று சுஹாசினி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
தனது பொருட்கள் திருடு போனது குறித்து நந்தன், இத்தாலி போலீஸில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...