இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் ரஜினிகாந்த், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோ உளிட்ட பல நகரங்களில் நடைபெற்று வந்தது.
மேலும், மதுரையை பின்னணியாக கொண்ட போர்ஷனும் பேட்ட படத்தில் இடம்பெறுகிறது. இதற்காக ரஜினிகாந்த் முறுக்கு மீசை வைத்த கெட்டப் ஒன்றிலும் நடிக்கிறார். இந்த கெட்டப்பும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, திரிஷா முதல் முறையாக ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும், பாபி சிம்ஹா, சிம்ரன், சசிகுமார் என்று படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘பேட்ட’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதிலும், படப்பிடிப்பு திட்டமிட்ட நாட்களில் 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கும் அவர், இதற்காக தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
தனது ரசிகர்களுக்கு விஜயதசமி வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், அதனுடன் இந்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...