கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் சஞ்சனா கல்ராணி, சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது தங்கையான நிக்கி கல்ராணி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணி, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார்.
11 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே சினிமாவுக்குள் நுழைந்த சஞ்சனா கல்ராணியின், முதல் படத்தின் இயக்குநர் அவரை பலவிதத்தில் பயன்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
மர்டர் என்ற இந்திப் படத்தை போட்டுக் காட்டிய இயக்குநர் அப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், கன்னடத்திற்கு ஏற்ப காட்சிகளில் மாற்றம் செய்துகொள்ளலாம் என்றும் சஞ்சனாவிடம் கூறியதோடு, ஒரே ஒரு முத்தக்காட்சியில் மட்டும் நடித்தால் போதும், என்றும் கூறினாராம்.
அதை நம்பி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பேங்காக் போன சஞ்சனாவை வைத்து பல முத்தக் காட்சிகளை இயக்குநர் படமாக்கியதோடு, அவரை ஆபசமாகவும் படம் பிடித்தாராம். இதெல்லாம் தனக்கு பிடிக்கவில்லை, என்று சஞ்சனா கல்ராணி மறுத்தாலும், அவரை விடாத இயக்குநர், “நாங்கள் சொல்வதை செய்யவில்லை என்றால், உன் கேரியரே நாசமாகிவிடும்” என்று மிரடி அவரை பலவிதத்தில் பயன்படுத்திக் கொண்டாராம்.
தற்போது, தனக்கு நேர்ந்த இந்த பாலியல் கொடுமையை சஞ்சனா கல்ராணி கூறியிருப்பதோடு, அது தொடர்பாக பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருவதால், கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...