Latest News :

”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி!
Sunday October-21 2018

முன்னணி ஹீரோயின்களின் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை என்றாலும், தற்போது கோடம்பாக்கத்தில் பிஸியான நடிகையாகியுள்ளார் வரலட்சுமி. வில்லி வேடம் என்றாலும், நடிப்பு திறமையை நிரூபிக்க கூடிய வேடங்களில் நடிப்பதோடு, விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு நிகரான வேடங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

இதற்கிடையே, வரலட்சுமி நடிக்கும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமான ’சக்தி’ திரைப்படத்தை இயக்கி வரும் பெண் இயக்குநர் பிரியதர்ஷினி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக இயக்குகிறார். ‘தி அயன் லேடி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் நித்யா மேனன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆனால், இதில் யார் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கப் போகிறார்கள், என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், வரலட்சுமி சரத்குமார் சசிகலா வேடத்திலும், நித்யா மேனன் ஜெயலலிதா வேடத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், ‘தி அயன் லேடி’ படத்தில் நடிப்பது குறித்து வரலட்சுமியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர் தான் நடித்தால் ஜெயலலிதா வேடத்தில் மட்டுமே நடிப்பேன், இல்லை என்றால் நடிக்க மாட்டேன், என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம்.

 

இதனால், தான் ‘தி அயன் லேடி’ படத்தின் தலைப்புக்கு பிறகு அப்படம் குறித்து வேறு எந்த தகவலையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறதாம்.

Related News

3635

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery