கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்திருக்கும் பாடகி சின்மயி, அதற்கான ஆதாரங்களை திரட்டிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் வைரமுத்து மீது வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
வைரமுத்து - சின்மயி விவகாரத்தை எப்படியாவது கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று சில சினிமா பிரபலங்கள் முயற்சித்தாலும், சின்மயியை தொடர்ந்து மேலும் சில நடிகைகள், நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர்கள் அர்ஜுன், தியாகராஜன் ஆகியோர் மீது சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி புவனா சேஷன், என்று சின்மயி தகவல் வெளியிட்டுள்ளார்.
வைரமுத்து மீது பாடகி புவனா பாலியல் புகார் தெரிவித்திருப்பதோடு, வைரமுத்துவால் தனக்கு நேர்ந்த கொடுமையை விளக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட, அதை பாடகி சின்மயி பகிர்ந்துள்ளார்.
Since a lot of you aren’t able to access the link pic.twitter.com/j2dlT37unj
&mdash ; Chinmayi Sripaada (@Chinmayi) October 21, 2018
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...