சிம்பு வம்பு தும்பு எதுவும் இல்லாமல், தற்போது சமத்து பிள்ளை என்று பெயர் எடுத்திருப்பதோடு, புதிய படங்களின் படப்பிடிப்புக்கு லீவு போடாமல் போய்விடுகிறாராம். இதனால், சிம்புவை மைத்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முன் வருகிறார்களாம்.
இந்த நிலையில், கோலிவுட்டை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் மீ டூ விவகரத்தில் சிம்புவின் பெயரும் அடிபட தொடங்கியுள்ளது. அவர் மீது நடிகை லேகா வாஷிங்டன் அளித்திருக்கிறார்.
’ஜெயம் கொண்டான்’, ‘கல்யான சமையல் சாதம்’ உள்ளிட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் லேகா வாஷிங்டன், சிம்புக்கு ஜோடியாக ‘கெட்டவன்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், நடிகை லேகா வஷிங்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கெட்டவன்’ என்ற ஒரே ஒரு வார்த்தையை போட்டு தனது மீ டூ பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த ஒரு வார்த்தை மூலம் லேகா வாஷிங்டன் சிம்பு மீது தான் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதாக செய்திகள் பரவ தொடங்கியுள்ளது. இதனால், சிம்பு ரசிகர்கள் சற்று கோபமடைந்திருப்பதோடு, லேகா வாஷிங்டனுக்கு எதிராக பதிவு செய்து வருகிறார்கள்.
லேகா வாஷிங்டன், தெளிவாக கூறாமல் இப்படி ஒரே வார்த்தை தனது மீ டூ பதிவை பதிவு செய்திருப்பது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்த, இந்த ட்வீட்டுக்கு சிம்பு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...