வட சென்னையை மையமாக வைத்து வெளியாகி மக்களிடம் வரவேற்பு பெற்ற படம் ‘அட்டு’. இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரிஷி ரித்விக், முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக் திறமையோடு கையாண்டதோடு, அந்த கதாபாத்திரத்திற்காக பல விஷயங்களை ரியலாக செய்து பாராட்டு பெற்றார். அதிலும், அப்படத்தில் இடம்பெற்ற கத்தி சுற்றும் காட்சி ஒன்றை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது, அந்த அளவுக்கு அக்காட்சியின் ரிஷி மிரட்டியிருப்பார்.
தற்போது, பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ரிஷி ரித்விக், நடிப்பில் ‘மரிஜுவானா’ என்ற படம் உருவாகிறது. இதில் ஹீரோயினாக ஆஷா நடிக்கிறார்.
தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் (Third Eye Creations) சார்பில் எம்.டி.விஜய் தயாரிக்கும் இப்படத்தை எம்.டி.ஆனந்த் இயக்குகிறார்.
இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், சரவணன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், ராஜு முருகன், ஒளிப்பதிவாளர் செல்வா, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர் யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

இயக்குநர் ராஜு முருகன் கிளாப் போர்டு அடிக்க படத்தின் முதல் காட்சி பதிவு செய்யப்பட்டது. மேலும், நடிகர் யோகி பாபு படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...