கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்திருக்கும் நிலையில், அர்ஜூன் அவர் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், கன்னட துணை நடிகை ஒருவர் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து அந்த நடிகை கன்னட தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ’அர்ஜூனடு ‘ என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூருவில் நடந்தது. அந்த படப்பிடிப்பில் 3 நாட்கள் கலந்து கொண்டேன். என்னுடன் 20 கல்லூரி மாணவிகள் பகுதி நேர அடிப்படையில் நடித்து கொடுத்தனர்.
அப்போது அர்ஜூன் என்னிடம் வந்து அந்த பெண்களின் தொலைபேசி எண்களை கேட்டார். மேலும் ஒரு ஹோட்டல் அறையின் எண்ணை கொடுத்து அங்கு வருமாறு என்னிடமும் என் தோழிகளிடமும் கூறினார். எனது தோழிகள் பட வாய்ப்புக்காக அர்ஜூனின் அறைக்கு சென்றனர். அங்கு தோழிகளிடம் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டார்.” என்று தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...