தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை தேவயானி, இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்துக் கொண்ட பிறகு நடிப்புக்கு சில ஆண்டுகள் ஓய்வு கொடுத்தவர், பிறகு மீண்டும் தனது கணவர் இயக்கிய படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். அதன் பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் போனவருக்கு ‘கோலங்கள்’ என்ற சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.
‘கோலங்கள்’ சீரியலை தொடர்ந்து மேலும் சில சீரியல்களில் நடித்த தேவயானி, தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியிருப்பதோடு, அம்மா வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சினிமாவில் திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு அண்ணி, அம்மா வேடங்கள் கொடுப்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் தேவயானி, “ஹீரோயின்களுக்கு கல்யாணம் ஆனதும், அடுத்த படத்துலேயே அண்ணியாக, அம்மாவாக நடிக்க கூப்பிடுவாங்க. டூயட் பாடின ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதெல்லாம் சினிமாவில் சகஜம். ஆனால், இப்போது நிலைமை மாறி வருகிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் இப்போது நிறைய வருவது நல்ல விஷயம்.” என்று கூறியுள்ளார்.
அஜித், விஜய், கமல், சூர்யா, விக்ரம் என பல முன்னணி ஹீரோயின்களுடன் நடித்திருக்கும் தேவயானி, தனது கணவருடன் சேர்ந்து நடிப்பதற்கான கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன், என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...