Latest News :

திருமண வாழ்க்கையை ரகசியம் காக்கும் ஸ்ரேயா! - காரணம் இது தான்
Tuesday October-23 2018

விஜய், ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கும் ஸ்ரேயா, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர், ஒரு சில இந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

 

இதற்கிடையே, வெளிநாட்டு விளையாட்டு வீரரை காதலித்து திடீர் திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரேயா, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கிறார். இதற்காக தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருபவர், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கும் அனுப்பி வருகிறார்.

 

விரைவில் வெளியாக உள்ள ‘நரகாசூரன்’ படத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா, ‘எ லிட்டில் பேர்டு’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை பெண் இயக்குநர் ஒருவர் இயக்குகிறார்.

 

இப்படம் குறித்து கூறிய ஸ்ரேயா, ”சினிமா ஆணாதிக்கம் மிக்க துறை என்பதை மறுக்கவில்லை. அப்படிப்பட்ட துறையில் பெண்கள் இயக்குநர்களாவதை பார்க்க பெர் உமையாக உள்ளது. கேமராவுக்கு முன்பு மட்டும் அல்ல பின்பும் கூட நிறை பெண்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுது தான் நல்ல மாற்றம் ஏற்படும். இது ஹீரோயினை மையப்படுத்திய படம் என்று பல இயக்குநர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால், அந்த படத்திலும் கூட பெண்ணை காப்பாற்ற ஒரு ஆணை கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்கும் போது அது என்ன பெண்களுக்கு முக்கியத்துவமான படம்? சுவாரசியம் மற்றும் சவாலான கதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

 

மேலும், தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய ஸ்ரேயா, “திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும்  என்னிடம் கேட்காதீர்கள். அது என் தனிப்பட்ட வாழ்க்கை. விற்பனைக்கு அல்ல. அது குறித்து நான் எப்பொழுதும் பேச மாட்டேன்.” என்றார்.

Related News

3644

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery