’96’ படத்தின் வெற்றியால் பெரும் உற்சாகமடைந்திருக்கும் விஜய் சேதுபதியின் கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது. ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்கள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விஜய் சேதுபதியை வைத்து ‘பண்ணையாறும் பத்மினியும்’, ‘சேதுபதி’ என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கிறார்.
’பாகுபலி 2’ படத்தை வெளியிட்டு பெரும் வெற்றிக் கண்டதோடு, யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தை தயாரித்து தயாரிப்பில் மிகப்பெரிய வெற்றியைக் கண்ட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கின்றது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டில் படமாகிறது. அந்த அளவுக்கு கதையும், சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்துவதாக இயக்குநர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
தென்காசி, குற்றாலம் போன்ற பகுதிகளில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாட்கள் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. அங்கு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ள படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, அஞ்சலி பங்கேற்கிறார்கள்.
கமர்ஷியல் பார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரூபன் எடிட்டிங் செய்கிறார். சிவசங்கர் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, எஸ்.என்.ராஜராஜன், யுவன் சங்கர் ராஜா, இர்பான்மாலிக் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...