ஆன்மே கிரியேஷன்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘மேடி @ மாதவ்’. (Maddy @ Madhav)
மாஸ்டர் அஞ்சய் அறிமுக நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ரிச்சா பாலோட், வையாபுரி, முத்துக்காளை, ரியாஸ்கான், பானு பிரகாஷ், ரோஷினி வாலியா, ஆதர்ஷ் ஆகியோருடன் ‘இனிது இனிது’ பட ஹீரோ ஆதித் மற்றும் புதுமுகம் நேகா கான் இருவரும் இளம் ஜோடியாக நடிக்கிறார்கள். அறிமுக வில்லன்களாக மும்பை நடிகர்கள் ஜீல்பி சையத், ஷாவெர் அலி ஆகியோர் நடித்துள்ளனர்.
விஞ்ஞான அறிவையும், தாய் பாசத்தையும் மையக்கருவாக கொண்டு உருவாக்கப்படும் இத்திரைப்படம் நாளைய இந்தியாவை வல்லரசாக மாற்ற உதவுவதோடு, அறிய கண்டுபிடிப்பையும், இளைய சமுதாயத்தின் திறமைகளையும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான முதல் விதையாகவும் இப்படம் அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. மாதவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாஸ்டர் அஞ்சய், புலியுடன் நடித்த காட்சிகள் தொடர்ந்து 8 நாட்கள் படமாக்கப்பட்டது இப்படத்தின் சிறப்பம்சமாகும். வீரமும், விவேகமும் மிகுந்த கதாபாத்திரத்தில் மாதவ் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவா, மூனாறு, செர்ராய் கடற்கரை, நிலம்பூர், சாயல்குடி, பொள்ளாச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் 100 நாட்களுக்கு மேலாக படமாக்கப்பட்டிருக்கும் இப்படம் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதமாக கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி அனில்குமார் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பிரதீஷ் தீபு இயக்குகிறார். ‘போக்கிரி’ புகழ் வி.பிரபாகர் இணை திரைக்கதை, வசனம் எழுத, அஜய் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். வி.டி.விஜயன், எஸ்.ஆர்.கணேஷ் பாபு எடிட்டிங் செய்ய, தோட்டதரணி கலையை நிர்மாணிக்கிறார். அன்பறிவு சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, அவுஸாபச்சன், இஷான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். நா.முத்துக்குமார், குட்டி ரேவதி பாடல்கள் எழுத, பிரசன்னா, ரிச்சர்ட் நடனம் அமைக்கிறார்கள். மக்கள் தொடர்பு பணியை டைமண்ட் பாபு கவனிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...