விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் படங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘சீதக்காதி’. இதில் விஜய் சேதுபதி நாடக கலைஞராக வயதான தோற்றத்தில் நடிக்கிறார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த நிலையில், ‘சீதக்காதி’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வாங்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் ‘விக்ரம் வேதா’ படத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாஜி தரணிதரன் இந்த படத்தில் செய்திருக்கும் விஷயங்கள் நிச்சயமாக உலகளாவிய பார்வையாளர்களால் பாராட்டப்படும். இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயது மேடை நாடகக் கலைஞராக தோன்றுவதை கண்ட ஒட்டுமொத்த திரையுலகில் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருக்கிறது. மேலும், சீதக்காதியில் விஜய் சேதுபதியே தனது பரிசோதனை முயற்சியை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பேஸன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு டி.கே.சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்ய, '96' படப்புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...