Latest News :

யோகி பாபுக்கு கனடா மாடல் ஜோடியா? - இயக்குநர் விளக்கம்
Tuesday October-23 2018

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘கூர்கா’ படத்தில் அவர் தான் ஹீரோ என்று தகவல் பரவிய நிலையில், அதை மறுத்த யோகி பாபு, தான் ஒரு முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன், படத்திற்கு ஹீரோ வேறு ஒருவர், என்று விளக்கம் அளித்திருந்த நிலையில், அப்படம் குறித்த மற்றொரு தகவலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

 

அதாவது, ‘கூர்கா’ படத்தில் கனடா நாட்டை சேர்ந்த எலிஸ்ஸா என்ற மாடல் நடிக்கிறார். இவர் யோகி பாபுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், இது குறித்து இயக்குநர் சாம் சாண்டனிடம் கேட்டதற்கு, “கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்த பட வாய்ப்பை எலிஸ்ஸா தன் வசப்படுத்தி இருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கவில்லை. அவர் அமெரிக்க தூதர் வேடத்தில் நடிக்கிறார்.” என்றார்.

 

தற்போது அதர்வா முரளியின் ‘100’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் இயக்குநர் சாம் ஆண்டன், ‘கூர்கா’ படப்பிடிப்பை வரும் டிசம்பர் மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

 

4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, ரூபன்  எடிட்டிங் செய்கிறார். இவர்களுடன் மேலும் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

3648

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery