1980 களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தொரட்டி தமிழ் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர்.
இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்த கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறாரகள்.
படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்காக அந்த பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அப்பகுதி மக்களுடன் இரண்டர கலந்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.
அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை , அன்பை , காதலை , உறவுகளின் உணர்வுகளை , கருவறுக்கும் கோபத்தை இயல்பாகவும் உயிரோட்டத்தோடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனைவரும் எழந்து நின்று கைதட்டி பாராட்டி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த குமார் ஶ்ரீதருக்கு அளித்தனர்.
செக்கோஸ்லோவேகியாவில் நடந்த PRAGUE மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது தொரட்டி படத்தின் கதையின்நாயகனான ஷமன் மித்ரூ வுக்கு வழங்கபட்டது.
கலந்து கொண்ட அனைத்து திரைப்பட விழாக்களிலும் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றதோடு,வரவிருக்கும் மாதங்களில் மேலும் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள உள்ள இப்படத்தினை திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் வாங்கி வெளியிடுகிறது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...