Latest News :

தியாகராஜனின் அதிரடி நடவடிக்கை! - பிரித்திகா மேனன் பேஸ்புக் மாயம்
Wednesday October-24 2018

பாலிவுட்டில் ஆரம்பித்த பாலியல் புகார் விவகாரம் பாடகி சின்மயி மூலம் தமிழ் சினிமாவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பலர் மீது பாலியல் புகார் கூறப்பட்டு மீ டூ என்ற வார்த்தை கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்த மீ டூ விவகாரத்தில் சமீபத்தில் சிக்கியவர் நடிகர் தியாகராஜன். கடந்த 40 வருடங்களாக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டவராக திகழும் தியாகராஜன் மீது பிரித்திகா மேனன் என்ற புகைப்படக் கலைஞர் பாலியல் புகார் தெரிவித்தார். படப்பிடிப்பின் போது தியாகராஜன் தனது அரை கதவை தட்டியதாக, பிரித்திகா மேனன் புகார் கூறினார்.

 

பிரித்திகா மேனனின் இந்த புகாரை மறுத்த தியாகராஜன், நேரடியாக பத்திரிகையாளர்களை சந்தித்தத்தோடு, அந்த பிரித்திகா மேனன் குறித்து சில தகவல்களை கூறியதோடு, ‘பொன்னர் சங்கர்’ திரைப்படத்தின் போர் காட்சி ஒன்றை திரையிட்டார். பிரம்மாண்டமான அந்த காட்சியை சுமார் 3 ஆயிரம் கலைஞர்களைக் கொண்டு பல நாட்கள் படமாக்கியதாக கூறிய தியாகராஜன், அந்த காட்சி படமாக்கப்பட்ட போது இரண்டு நாட்களுக்கு புகைப்பட கலைஞராக பிரித்திகா மேனன் பணிபுரிந்ததோடு, அப்போது எடுத்த புகைப்படங்களோடு அவர் தீடீரென்று மாயமாகிவிட்டார். பிறகு நாங்களும் விட்டுவிட்டோம். அந்த போர் காட்சி எடுத்த போது, தூங்க கூட நேரம் இல்லாமல் நான் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு சூழலில் இப்படி செய்துவிட்டேன், என்று மீது அந்த பெண் புகார் கூறியதை என்னை மிகவும் பாதித்துவிட்டது, என்றும் கூறினார்.

 

மேலும், பிரித்திகா மேனன் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க இருக்கிறேன், அதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது, என்றும் தெரிவித்தார்.

 

தியாகராஜனோடு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட நடிகர் ராதாரவி, “மீ டூ என்பது பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட நல்ல இயக்கம், ஆனால் அதை பல பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதிலும் சினிமாவில் தான் இந்த மீ டூ ரொம்ப தவறாக பயன்படுத்தப்படுகிறது. நண்பர் தியாகராஜன் பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். அவருக்கு குடும்பம் இருக்கிறது. சினிமா துறையில் மரியாதை உள்ள மனிதர். அப்படி இருக்கும் போது இந்த தவறான புகாரால் அவர் மனம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும். இந்த நிலமை நீடித்தால் சினிமாவில் ஆண்களே பெண்கள் வேடம் போட்டு நடிக்கும் நிலை வரலாம். யார் மீதும் யார் வேண்டுமானாலும் புகார் கூறி அது பத்திரிகைகளில் வெளியாவது தொடர்ந்தால், நாளைக்கு சினிமாவுக்கு மட்டும் அல்ல, பெரிய பெரிய மனிதர்கள் மீது கூட சர்வசாதாரணமாக புகார் கூறுவார்கள், அவமானப்படுத்துவார்கள் பிறகு இதை வைத்தே பிளாக் மெயில் பண்ணுவார்கள். இப்பொது அப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த நிலை மாற வேண்டும், யார் புகார் கூறினாலும், அதை பத்திரிகையாளர்கள் இரண்டு தரப்பிலும்  விசாரித்துவிட்டு செய்தி போடுவது நல்லது.” என்றார்.

 

இந்த நிலையில், தியாகராஜன் மீது புகார் கூறிய பிரித்திகா மேனனின் பேஸ்புக் பக்கம் திடீரென்று மாயமாகியுள்ளதை நமக்கு தெரிவித்த தியாகராஜன் தரப்பு, அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளது.

 

இதன் மூலம் பிரித்திகா மேனன் தியாகராஜன் மீது கூறியது பொய்யான புகார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

Related News

3653

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery