நடிகர்கள், நடிகைர் பலரை உருவாக்கிய ‘கூத்துப்பட்டறை’ நடிப்பு பயிற்சி பள்ளியின் நிறுவனர் நா.முத்துசாமி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.
உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்த நா.முத்துசாமி, இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தை சேர்ந்த நா.முத்துசாமி, தெருக்கூத்து மூலம் பிரபலமானவர். பத்மஸ்ரீ விருது, இந்திய அரசின் சங்கீத அகடாமி விருதை உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கும் நா.முத்துசாமி கூத்துப்பட்டறை மூலம் விஜய் சேதுபதி, விமல், விதார்த், பசுபதி உள்ளிட்ட பல நடிகர்களை உருவாக்கியார் ‘வாழ்த்துக்கள்’ என்ற திரைப்படத்தில் நடித்தும் இருக்கிறார்.
முத்துச்சாமி எழுதிய நா.முத்துசாமி கட்டுரைகள் என்ற நூல் 2005-ஆம் ஆண்டில் தமிழக அரசு விருதை வென்றது.
நா.முத்துசாமியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...