வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்நடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இவ்விரு சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட கலந்தாய்வு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், பைரசியை ஒழிப்பதற்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:
1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உள்/வெளி அரங்குகள், வாசல்கள், பார்க்கிங் பகுதிகளில் CCTV கேமரா பொருத்த வேண்டும். அது வருகிற நவம்பர் 6 தீபாவளி தினத்திற்க்குள் பொருத்தபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. பொருத்தபட்ட கேமராக்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி record செய்யபடும்.
4. வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் CCTV கேமரா பொருத்தாத திரையரங்குகளுக்கு திரைப்படம் தரப்படமாட்டாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. இனி அனைத்து காட்சிகளிலும் 2 நபர்களை திரையரங்குக்குள் முழு நேர கண்காணிப்பு பணிக்கு அமர்த்தபடுவர்.
6. ஒவ்வொரு முறை திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.
7. திரைப்படத்தினை காண வரும் பொது மக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாக பரிசோதனை செய்யப்படும்.
8. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கபடும். மேற்படி விஷயம் குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை அந்த குழுவில் வைத்து ஆலோசித்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் திருட்டு வீடியோவை ஒழிக்க இந்த குழு கடுமையாக போராடும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...