தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகைகள், தற்போது தைரியமாக அதைப் பற்றி பேசுவதோடு, தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோம் என்பதையும் வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.
சின்மயி தொடங்கிய இந்த பாலியல் தொல்லை விவகாரத்தை தற்போது பல முன்னணி நடிகைகளும் கையில் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகை அமலா பால் தான் பிரபல இயக்குநர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியிருப்பதோடு, அவரது பெயரையும் வெளியிட்டுள்ளதால், கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண் இயக்குநர் லீனா மணிமேகலை இயக்குநர் சிசு கணேசன் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் அமலா பால், லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை தான் ஒப்புக் கொள்கிறேன், என்று கூறியவர், தானும் அவரால் பாலியல் துன்புறுத்தலால் அவதிப்பட்டேன், என்று தெரிவித்திருக்கிறார்.
முதல் முறையாக பிரபல ஹீரோயின் ஒருவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.
லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை மறுத்து வந்த சுசி கணேசன், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால், தான் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#MeToo #MeTooIndia #LeenaManimekalai #susiganesan pic.twitter.com/Jt2sS685H5
&mdash ; Amala Paul ⭐️ (@Amala_ams) October 24, 2018
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...