Latest News :

மாணவர்களுடன் சேர்ந்து கின்னஸ் சாதனை படைக்கப் போகும் ஆரி!
Tuesday August-29 2017

’ரெட்ட சுழி’, ‘நெடுஞ்சாலை’ ‘உன்னோடு கா’, ‘மாயா’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஆரி, சினிமாவில் பிஸியான ஹீரோக்களில் ஒருவராக இருந்தாலும், விவசாயம் உள்ளிட்ட சமூக விழிப்புணர்வு விஷயங்களிலும் அதிக ஈடுபட்டு காட்டி வருகிறார்.


இதற்கிடையே, பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து நாற்று நடுவதில் உலக சாதனை புரிய ஆரி முயற்சி செய்கிறார்.

‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளை சார்பில் ‘நானும் ஒரு விவசாயி’ என்ற தலைப்பில் 5000 மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து நாற்று நட்டு கின்னஸ் உலக சாதனைய புரிய இருக்கிறார்கள். இதில் நடிகர் ஆரியும் பங்கேற்கிறார்.

இந்த உலக சாதனை நிகழ்வு, இன்று (ஆக.29) காலை 10 மணீயளவில் திண்டிவனம் மாவட்டம் ஆவணிப்பூர் அருகே உள்ள நல்லநிலம் பகுதியில் நடைபெறுகிறது. 

அழிந்து வரும் விவசாயத்தை காப்பாற்றுவதுடன், இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தின் அவசியத்தை புரிய வைப்பது தான் இந்த கின்னஸ் உலக சாதனையின் நோக்கமாகும்.

Related News

366

’ஆர்யன்’ படத்தில் செல்வா சார் தான் ஹைலைட் - நடிகர் விஷ்ணு விஷால்
Thursday October-23 2025

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர்  பிரவீன்...

”சினிமாவை வாழ விடுங்கள்” - ‘தடை அதை உடை’ பட இயக்குநர் ஆதங்கம்
Thursday October-23 2025

காந்திமதி பிக்சர்ஸ் என்ற  நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, ’அங்காடித்தெரு’ மகேஷ், ’திருக்குறள்’ குணாபாபு நடிப்பில், 1990-களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தடை அதை உடை’...

சமூகப் பிரச்சனைகளை தொடர்ந்து பேசுவேன் - ‘டியூட்’ இயக்குநர் கீர்த்தீஸ்வரன்
Thursday October-23 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'...

Recent Gallery