பெண் இயக்குநர் லீனா மணிமேகலை, இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறி வந்த நிலையில், அதை சுசி கணேசன் மறுத்ததோடு, தனது மீது பொய்யான புகார் கூறும் லீனா மணிமேகலை மீது வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நடிகை அமலா பால், இயக்குநர் சுசி கணேசன், தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறி, அது பற்றி ட்விட்டரில் பெரிய பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.
அமலா பாலின் இந்த புகார் மூலம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சுசி கணேசன், போன் செய்து ஆபாசமாக பேசி தன்னை மிரட்டியதாகவும், அதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருப்பதாகவும் அமலா பால் மீண்டும் சுசி கணேசன் மீது புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமலா பால், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இயக்குநர் சுசி கணேசன் மற்றும் அவரின் மனைவி மஞ்சரி எனக்கு போன் செய்தார்கள். என் நிலையை விளக்கலாம் என்று நினைத்து போனை எடுத்தேன். அவரின் மனைவியை சமாதானம் செய்ய முயன்றபோது சுசி என்னை திட்டத் துவங்கினார். அவரின் மனைவியோ அதை கேட்டு சிரிக்கிறார். இருவரும் சேர்ந்து என்னை பற்றி கேவலமாக பேசினார்கள். இது போன்று செய்து என்னை பயமுறுத்தலாம் என்று நினைக்கிறார்.” என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...