ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’சர்கார்’ தீபாவளியன்று வெளியாக இருந்த நிலையில், அரசு விடுமுறையை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முன்னதாக நவம்பர் 2 ஆம் தேதியே வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, ‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடையது என்றும் அதை ‘செங்கோல்’ என்ற தலைப்பில் தான் எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் உதவி இயக்குநர் ஒருவர் புகார் கூறியுள்ளார். இது தொடர்பான பஞ்சாயத்து எழுத்தாளர்கள் சங்கத்தில் நடந்து வந்த நிலையில், சர்கார் படத்தின் கதையை கேட்ட எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ், அது செங்கோல் படத்தின் கதை தான், என்றும் கூறிவிட்டாராம். இதனால், சங்கம் சார்பாக ‘சர்கார்’ படத்தின் மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், இந்த கதை திருட்டு தொடர்பாக ராஜேந்திரன் என்பவர் சென்ன உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் முறையிட்டிருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...