Latest News :

ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கிய நடிகை! - ஷாக்கான நடிகைகள்
Friday October-26 2018

இந்திய சினிமா துறையில் நடிகைகளை காட்டிலும் நடிகர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதுமட்டும் இன்றி, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்கும் நடிகர்கள் பேரன், பேத்தி எடுத்த பிறகும் கூட இளம் நடிகைகளுடன் டூயட் பாடிக்கொண்டிருப்பது வழக்கமாகிவிட்டது. சம்பள விஷயத்திலும் நடிகர்களின் கைதான் இந்திய சினிமாவில் ஓங்கியிருக்கிறது.

 

நடிகைகள் விஷயத்தில் 5 முதல் 10 ஆண்டுகள் மட்டுமே முன்னணி ஹீரோயினாக இருப்பவர்கள் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கி விடுவதோடு, அம்மா, அக்கா போன்ற வேடங்களிலும், வில்லி வேடங்களிலும் நடிக்க தொடங்கி விடுவார்கள்.  அதேபோல் சம்பள விஷயத்திலும், நடிகர்கள் சுமார் 10 கோடி ரூபாயில் இருந்து 50 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கினாலும், நடிகைகள் என்னவோ லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்குகிறார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே சில கோடிகளை சம்பளமாக வாங்குகிறார்கள்.

 

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயந்தாரா ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அதேபோல் பாலிவுட் சினிமாவில் தீபிகா படுகோனே ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் நடிக்கும் அனைத்து படங்களிலும் இந்த சம்பளம் வாங்குவதில்லையாம். ஒரு சில படங்களில் மட்டுமே இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுவதாகவும், சில படங்களின் கதை நன்றாக இருந்தால் இவர்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், ஒட்டு மொத்த இந்திய சினிமாவே ஆச்சரியப்படும் அளவுக்கு, ஹீரோக்களுக்கு நிகரான சம்பளத்தை நடிகை கங்கனா ரனாவத் வாங்கியிருக்கிறார்.

 

நடிகை கங்கனா ரணாவத் தற்போது ’மணிகர்ணிகா’ என்கிற வரலாற்று படத்தில் நடித்ததற்காக ரூ.14 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். இந்திய சினிமா வரலாற்றில் ஹீரோயின் ஒருவர் வாங்கிய அதிகமான சம்பளம் இது தானாம். 

 

இந்த தகவல் கசிய தொடங்கியதும், ஒட்டு மொத்த இந்திய சினிமா ஹீரோயின்களும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.

Related News

3674

நடிகை சரோஜா தேவி வாழ்க்கை வரலாறு!
Monday July-14 2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது - மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி
Monday July-14 2025

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

Recent Gallery