Latest News :

விக்ராந்த் படத்திற்கு வசனம், திரைக்கதை எழுதிய விஜய் சேதுபதி!
Friday October-26 2018

தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், விக்ராந்த் நடிக்கும் படத்தின் வசனத்தை எழுதியதோடு, அப்படத்தின் திரைக்கதையிலும் பணியாற்றியுள்ளார்.

 

முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக கடுமையாக உழைத்து வரும் விக்ராந்த், ‘வெண்ணிலா கபடி குழு 2’, ‘சுட்டு பிடிக்க உத்தரவு’, ‘பக்ரீத்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து தனது சகோதரர் சஞ்ஜீவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

 

இன்னும் தலைப்பு வைக்காத இந்த படத்திற்கு தான் நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதியிருக்கிறார். இது குறித்து இயக்குநர் சஞ்ஜீவ் கூறுகையில், “2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இயக்கினேன்.  இதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய் சேதுபதி சார் அவர்களைச்  சந்தித்தேன். அவரிடம் ஒரு கதையின் சுருக்கமான வடிவத்தைச் சொன்னேன். அதைக் கேட்டதும், மிக நன்றாக இருக்கிறது. இது விக்ராந்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லியதுடன், இதற்கு நான் வசனம் எழுதவா? என கேட்டார்.  அவர் இருக்கும் பிஸியான ஷெட்யூலில் அது எப்படி சாத்தியம்? என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அவரே கிடைக்கும் நேரங்களில் பணியாற்றலாம் என்று கூறினார்.  

 

சொன்னபடி அவர் நடிக்கும் படங்களின் படபிடிப்பு முடிந்த பிறகு, இரவு நேரங்களில் என்னுடன் கதை விவாதத்தில் பங்கு கொண்டு, திரைக்கதையை மெருகேற்றியதுடன், வசனத்தையும் அவரே எழுதினார். ஏற்கனவே அவர் தயாரித்து, நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய் ’ என்ற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் என்று தெரியும். அதற்கு பிறகு அவர் நடிக்காத படத்திற்கு, மற்றொரு நாயகனுக்காக அவர் வசனம் எழுதுவது என்பது இது தான் முதல் முறை. விக்ராந்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்திருக்கும் இந்த உதவிக்கு நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் இருப்போம்.” என்றார்.

Related News

3675

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery