தமிழ் சினிமாவில் அம்மா வேடம் என்றால் இயக்குநர்களின் நினைவில் மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் சட்டென்று நினைவுக்கு வருபவர் சரண்யா பொன்வன்னன் தான். கிராமத்து அம்மாவாக கலக்கியவர், தற்போது சென்னை அம்மாவாகவும் நடித்து பாராட்டு பெற்றுவிட்டார்.
இப்படி அம்மா வேடத்திற்காகவே அவதரித்தது போல, அத்தனை அம்மா கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டு பிஸியான அம்மாவாக கோடம்பாக்கத்தில் வலம் வரும் சரண்யா பொன்வன்னன், சூப்பர் ஹிட் திரைப்படமான ‘நாயகன்’ மூலம் தான் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தாலும், அப்படத்தை தொடர்ந்து சரண்யா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் ஜொளிக்காமல் போனது பலருக்கும் தெரிந்தது தான். அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் திருமணம் செய்துக்கொண்டு நடிப்பதை தவிர்த்து வந்தார். பிறகு அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியவர், தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்தாலும், ஹீரோயினாக தன்னால் ஒரு ரவுண்ட் வர முடியவில்லையே, என்று தற்போதும் வருத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறாராம்.
இது குறித்து சமீபத்திய பேட்டில் ஒன்றில், “நாயகன் எனது முதல் படம். மிகப்பெரிய வெற்றி பெற்றபோது நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன். அப்படத்தை தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் வந்தாலும், அப்போது ஹீரோயின்கள் சாதாரணமாக செய்த காரியங்களை நான் செய்ய மாட்டேன் என்று சொன்னேன், குளியல் காட்சி, முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன், என்று கூறியதால் என்னை அனுகியவர்கள் விலகி சென்றார்கள். பிறகு கல்யாணம், நடிப்புக்கு டாடா காட்டினேன். திடீரென்று கிடைத்த அம்மா வேடம் நான் போடும் கண்டிஷனுக்கு சரியாக இருந்ததால் அதையே பிடித்துக்கொண்டே. தற்போது வண்டி நல்லா தான் போய்கிட்டு இருக்கு. இருந்தாலும், ஹீரோயினா சினிமாவில் ஒரு ரவுண்ட் வர முடியல என்ற கவலையும் இருக்கு.” என்று சரண்யா பொன்வன்னன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...