விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தில் ஹீரோயினாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். விமல் - ஆஷனா காமினேஷனின் ஹாட் புகைப்படங்கள் வைரலாகியுள்ள நிலையில், அப்படத்தின் டீசர் 20 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
சாய் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் சார்மிளா மான்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் இப்படத்தில் ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோர் நடிக்க போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை விவேகா எழுதியுள்ளார். கலையை வைரபாலன் நிர்மாணிக்க, கந்தாஸ் நடனம் அமைக்கிறார். ரமேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, தினேஷ் படத்தொகுப்பு செய்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை சுப்ரமணி கவனிக்கிறார்.
இப்படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ஏ.ஆர்.முகேஷ் படம் குறித்து கூறுகையில், “இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்.
சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர், அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.
இன்று தியேட்ட்ருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தான் தியேட்டர்களுக்கு வருகிறார்கள், அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை தான் கதையாக சொல்கிறோம்.

இந்த படத்தின் டீசரை யூ டியூப்பில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதுவும் ஆறே நாட்களில். இதற்கு முன்பு விமல் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு எந்த படத்திற்கும் கிடைத்ததில்லை. டீசருக்கு கிடைத்த இந்த வரவேற்புக்கேற்ற மாதிரி படமும் இருக்கும்.
படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்கள் நடை பெற்றது. தென்காசியிலும் சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.
முகம் சுளிக்கிற மாதிரி ஆபாசம் இல்லாமல் ரசிக்கிற மாதிரி கிளாமர் ஹுயூமர் படம் இது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது.” என்றார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...