‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பிரபல இயக்குநர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
புகழ் பெற்ற இயக்குநர் ஒருவரை சந்திக்க சென்ற போது, அவர் யாஷிகாவின் அம்மா மூலமாக பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தாராம். அப்பா வயதுள்ள அந்த இயக்குநர் தன்னை நேரடியாக பாலியல் துன்புறுத்தல் செய்திருந்தால் நிச்சயம் புகார் கொடுத்திருப்பேன், என்று கூறியிருக்கும் யாஷிகா, அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை, என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், பொது இடத்தில் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு சரியான பதிலடி கொடுத்தாராம். போலிசில் அது பற்றியும் புகார் கூறியிருந்தாராம்.
அது மட்டுமல்ல, சமீபத்தில் ஒரு வீடியோவில் போலிஸ்காரர் ஒருவர் ஒரு பெண்ணிடம் என்ன ரேட் என கேட்ட வீடியோ வைரலானது. அதில் இருந்த பெண் யாஷிகா தானாம். இந்த தகவலை யாஷிகாவே கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...