Latest News :

செல்பி எடுத்தவரின் போனை தட்டிவிட்டது ஏன்? - சிவகுமார் விளக்கம்
Monday October-29 2018

யோகா, தியானம் என்று ரொம்பவே அமைதியான மனிதராக இருக்கும் சிவகுமாரின் இன்னொரு முகம் தான் இன்று தமிழகம் முழுவதும் டிரெண்டிங். மருத்துவமனை திரப்பு விழாவுக்கு சென்ற சிவகுமார், அங்கு தன்னை செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் கைப்பேசியை ஆவேசமாக தட்டிவிட்டார். யாரும் எதிர்ப்பார்க்காத இந்த சம்பவம், அந்த கைபேசி இளைஞருக்கு மட்டும் இன்றி அங்கிருந்த அத்தனை பேருக்கும் பெரும் அதிர்ச்சியளித்தது.

 

இதையடுத்து, சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ தான், இன்று தமிழகம் முழுவதும் டிரெண்டாகியுள்ளது.

 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது விளக்கத்தை அளித்திருக்கும் நடிகர் சிவகுமார், “செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் செய்வது நியாயமா?

 

தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? விஐபி என்றால் தான் சொல்லும்படி தான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?

 

ஆயிரக்கணக்கான மக்களுடன் எத்தனையோ விழாக்களிலும், விமான நிலையங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளேன் என்பது  உங்களுக்குத் தெரியுமா? 

 

நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

 

மேலும், என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஹீரோ தான். அதேபோல், அடுத்தவர்களை எந்தளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

3688

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery