கருப்பையா முருகன் இயக்கத்தில் அசோக் ஹீரோவாக நடிக்கும் ‘விடியாத இரவொன்று வேண்டும்’ படத்தின் மூலம் ஹ்ரித்திகா என்பவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர் பிரபல நடிகை ஆம்னியின் தம்பி மகள் ஆவார்.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்த ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன், நடிகை ஆம்னியை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஆம்னி, தற்போது தெலுங்கில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஆம்னியின் தம்பி சீனிவாஸ் மகள் ஹ்ரித்திகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரியாகியிருக்கிறார். தனது அத்தை ஆம்னியின் ஆசியோடு சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் ஹ்ரித்திகா, தனது அத்தையை விட நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதோடு, அவரை விட அதிகமான விருதுகளை வாங்க வேண்டும், என்று ஆசைப்படுகிறார்.
தனது சினிமா பயணத்தின் ஆரம்பம் குறித்து கூறிய ஹ்ரித்திகா, “எனது அத்தை ஆம்னிக்கு தெலுங்கில் மிகப் பெரிய செல்வாக்கு. அவர் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். அவரை பார்த்து வளர்ந்த நான் அவரைப் போலவே நடித்து பேர் வாங்க வேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே ஆசை.
அதே மாதிரி மாமா காஜாமைதீனும் ஏராளமான படங்களை எடுத்து பேர் பெற்றவர். இருவரும் பள்ளிப் படிப்பை முடி அதற்குப் பிறகு நடிக்கலாம் என்று ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர்.
நடிப்பது என்று முடிவான பிறகு முறைப்படி பரத நாட்டியம் மற்றும் சினிமாவுக்குண்டான டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன்.
பூர்வீகம் ஆந்திரா வளர்ந்தது தமிழ் நாடு இப்போ காலேஜ் படிச்சிட்டு இருப்பது பெங்களூரில். அசோக் நடிக்கும் படத்தில் வாய்ப்பு வந்ததும் ஒத்துக்கிட்டேன். படம் முடிவடைந்து விட்டது. இனி நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். என் அத்தையை விட நிறைய படங்களில் நடிக்கணும். அவரை விட அதிகமான விருதுகளை பெற்று அவர்களிடம் அதை காணிக்கையாக்க வேண்டும். அது தான் என் ஆசை.” என்றார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...