Latest News :

புலியான முருகதாஸ்! - தெரித்து ஓடும் ஹீரோக்கள்
Tuesday October-30 2018

தீபாவளியன்று வெளியாக உள்ள விஜயின் ‘சர்கார்’ படத்தின் கதை வருண் ராஜேந்திரன் என்பவரது கதை என்றும், அதை திருடி முருகதாஸ் ‘சர்கார்’ என்ற பெயரில் திரைப்படமான எடுத்து வருகிறார் என்றும் எழுத்தாளர்கள் சங்கத்  தலைவர் கே.பாக்யராஜ் கூறி வருவதோடு, இரண்டு கதைகளையும் படித்துவிட்டு இரண்டும் ஒரே கதை தான், என்று தீர்ப்பளித்ததோடு, பல ஊடகங்களில் இது குறித்து பேட்டியும் கொடுத்து வருகிறார்.

 

பாக்யராஜின் குற்றச்சாட்டை மறுக்கும் முருகதாஸ், பாக்யராஜ் ஒருதலை பட்சமாக நடந்துக்கொள்கிறார். செங்கோல் என்ற கதையை படித்தவர், எனது முழுமையான கதையை படிக்காமலேயே படித்ததாக சொல்வதோடு, என்னிடம் விசாரணை நடத்தாமல், விசாரித்து விட்டதாகவும் கூறி வரும் முருகதாஸ், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அனுக போவதாக கூறியுள்ளார்.

 

இந்த நிலையில், முருகதாஸின் முந்தைய திரைப்படங்களான ‘கத்தி’, ‘தீனா’ உள்ளிட்ட படங்களும் திருடப்பட்ட கதை தான் என்று பலர் கூறி வருகிறார்கள். மேலும், சர்கார் படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருந்ததாகவும், ஆனால், தற்போது நடைபெற்று வரும் கதை திருட்டு பஞ்சாயத்தால், முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மாட்டார், என்றும் கூறுகிறார்கள்.

 

ரஜினி மட்டும் அல்ல மேலும் சில முன்னணி ஹீரோக்களும், புலி வந்தால் எப்படி தெரித்து ஓடுவார்களோ அதுபோல் முருகதாஸ் என்றால் தெரித்து ஓட தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து தனது பட வெளியீட்டில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் விஜய், இந்த விவகாரத்தால் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.

 

இதற்கிடையே, ராஜேந்திரன் என்பவர் சர்கார் கதை திருட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று வருகிறது. 

 

அதேபோல், சர்கார் கதை தனது தான் என்று கூறும் வருண் ராஜேந்திரனிடம் சமரசாம் பேசி, அவருக்கு ரூ.30 லட்சம் தருவதாக சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் பரவி வருகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

3691

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery