’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மக்களிடம் பிரபலமாகியுள்ளார். தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர், சினிமாவில் மட்டும் இன்றி பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் போதும் கவர்ச்சியான உடை அணிந்தே வருவார். இதனால், யாஷிகா ஆனந்துக்கு சமூக வலைதளங்களில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இதற்கிடையே, தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து கூறிய யாஷிகா ஆனந்த், பிரபல இயக்குநர் ஒருவரிடம் பட வாய்ப்பு குறித்து பேச சென்ற போது, அவர் தனது அம்மா மூலமாக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறினார். மேலும், அந்த இயக்குநருக்கு தனது தந்தை வயது, என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், அந்த இயக்குநர் பிரபலமான ஹீரோவின் தந்தை, என்ற புதிய தகவலை யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கிறார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், கார்த்தி ஆகியோர் இருக்க, இவர்களின் தந்தைகளில் இயக்குநராக இருப்பது விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும், தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவும் தான் என்பதால், நெட்டிசன்கள் இந்த விவகாரத்தில் இந்த இருவர் பெயரையும் குறிப்பிட்டு தகவல் பரப்பி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற பாலியல் புகார் கூறும் நடிகைகளுக்கு நடிகர் ராதாரவி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், யாஷிகாவின் இந்த பாலியல் குற்றச்சாட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...