பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வாருணி, பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பதோடு, ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டியிருக்கிறார். தற்போது தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருபவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
நடிகர் சிவாஜியின் பேரனும் நடிகருமான சிவாஜி தேன் என்கிற சிவகுமாரை தான் சுஜா திருமணம் செய்துகொள்ளப் போகிறார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாராம் சம்மதம் தெரிவித்து விட்டனர்.
இந்த நிலையில், சுஜா வாருணி தனது திருமணத்தின் முதல் பத்திரிகையை நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கியுள்ளார். மேலும், கமல் தான் அவரது திருமணத்தையும் நடத்தி வைக்கப் போகிறாராம்.
இது குறித்து கூறிய சுஜா வாருணி, “என் திருமணத்தை எனது தந்தை இடத்தில் இருந்து கமல் தான் நடத்தி வைக்க உள்ளார்.
என் தந்தை சமீபத்தில் மறைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதை பகிர்ந்துகொண்டு கமல் தான் என் திருமணத்தின் போது தந்தை இடத்தில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். என் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க உள்ளார்.” என்றார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...