பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதோடு, கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட பலர் மீதும் பாலியல் புகார் கூறி வந்தார். அந்த வரிசையில் பிரபல நடன இயக்குநர் கல்யாண், இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.
மேலும், அந்த பெண் கல்யாண் குறித்து தெரிவித்த பாலியல் புகார் பதிவை பாடகி சின்மயி ரீட்வீட் செய்து அதை வைரலாக்கி பரபரப்பாக்கினார். பிறகு, அந்த பாலியல் புகாரை பதிவு செய்த பெண்ணே, “நான் விளையாட்டுக்காக அப்படி போட்டேன், ஆனால் அதை விசாரிக்காமல் சின்மயி அப்படியே ரீட்வீட் செய்துவிட்டார்” என்று கூறினார். இதன் பிறகு கல்யாண் மீது கூறப்பட்ட புகார் பொய்யானது என்று தெரிந்தவுடன் சின்மயி, மவுனமாகிவிட்டார்.
இந்த நிலையில், இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடன இயக்குநர் கல்யாண், ”அந்த பெண் விளையாட்டாக கூறியதாக கூறிவிட்டார். ஆனால் அதை பரபரப்பாக்கிய சின்மயி அது சம்பந்தமாக என்னிடம் சிறு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அவர், என் விஷயத்தில் இவ்வாறு நடந்து கொள்வார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...