Latest News :

விஷால் தங்கை திருமணம் - அண்ணன் மிஸ்ஸிங்!
Tuesday August-29 2017

நேற்று முன் தினம் நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டிக்கும், உம்மிடி கிரித்திஸுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அன்றை தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

காலை நடைபெற்ற திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக முன்னணி நடிகர்கள்,  நடிகைகள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

 

அதேபோல் தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

இதற்கிடையே, ரஜினிகாந்த், விஜய் பங்கேற்கையில் அஜித் மட்டும் பங்கேற்காமல் விஷாலை அவதித்து விட்டார், என்று செய்திகள் பரவி வருகிறது.

 

ஆனால், அதைவிடவும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், விஷாலின் சொந்த அண்ணனான விக்ரம் கிருஷ்ணாவே அந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை என்பது தான்.

 

விஷாலுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்த விஷால் கிருஷ்ணா, தனது படங்கள் ஓடாத நிலையில் ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மூலம், விஷாலை ஹீரோவாக வைத்து படங்கள் தயாரிக்க தொடங்கினார். ‘திமிரு’ படத்தை தயாரித்த போது அதில் நடித்த ஸ்ரேயா ரெட்டியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட விக்ரம் கிருஷ்ணா, தொடர்ந்து விஷாலை வைத்து தயாரித்த பல படங்கள் தோல்வியடைந்தது.

 

இதையடுத்து7 விஷால் பிலிம் பேக்டரி என்ற சொந்த நிறுவனத்தை தொடங்கி விஷால், தான் நடிக்கும் படங்களை தயாரிக்க தொடங்கிவிட்டார்.

 

ஆனால் செய்தி இதுவல்ல, விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி திருமணத்தில், அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும், அண்ணி ஸ்ரேயா ரெட்டியும் பங்கேற்கவில்லை. திருமணத்திற்கு முன்பு நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சி, திருமணம், திருமண வரவேற்பு என்று எதிலுமே விக்ரம் கிருஷ்ணா - ஸ்ரேயா ரெட்டி ஜோடி பங்கேற்கவில்லை.

 

மொத்தத்தில்,  ஊர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் விஷால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை மட்டும் இன்னும் தீரவில்லை போலிருக்கிறது.

Related News

370

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery