Latest News :

திடீர் கர்ப்பமான காயத்ரி! - ஹரிஷ் உத்தமன் போட்டோவுடன் விளக்கம்
Saturday November-03 2018

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், நடன இயக்குநராகவும் வலம் வரும் காயத்ரி ரகுராம், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் திரைப்படம் ஒன்றையும் இயக்கி முடித்திருக்கிறார்.

 

இதற்கிடையே, காயத்ரி கர்ப்பமாக இருப்பது போல் புகைப்படம் ஒன்று வெளியானது. பல ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற காயத்ரி, தனியாக வசித்துக் வரும் போது அவர் எப்படி கர்ப்பமானார்?, அவருக்கு எப்போது இரண்டாம் திருமணம் நடந்தது?, அவரது கணவர் யார்? என்று ரசிகர்கள் மனதில் பல கேள்விகள் எழுந்ததோடு, கோடம்பாக்கத்தில் புதிய பரபரப்பை கிளப்பியது.

 

இந்த நிலையில், தனது கர்ப்பத்திற்கான காரணம் குறித்து இன்று விளக்கம் அளித்திருக்கும் காயத்ரி, நடிகர் ஹரிஸ் உத்தமனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் ரசிகர்கள் ஷாக்காகிவிட்டார்கள்.

 

ஆனால், அப்படியே அந்த புகைப்படத்தின் கீழே பார்த்தால், காயத்ரியின் கர்ப்பத்திற்கு ஒரு திரைப்படம் தான் காரணம் என்றும், ஹரிஷ் உத்தமனுடன் நடிக்கும் ஒரு படத்தில் காயத்ரி கர்ப்பமாக இருப்பது போல் நடிப்பதாகவும், கூறியுள்ளார்.

 

காயத்ரியின் இந்த புகைப்படம் மற்றும் விளக்கத்தின் மூலமாகவே அவரால் ஏற்பட்ட பரபரப்பும் அடங்கியது.

 

Gayathri Raghuram and Harish Uthaman

Related News

3701

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery