இசைப் புயல், ஆஸ்கார் நாயகன் என்ற பெருமையோடு இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியாவை தாண்டி சில வெளிநாடுகளிலும் தனது இசையை பரவவிட்டிருக்கிறார்.
தற்போது இசை பள்ளி, படப்பிடிப்பு தளம் என்று தனது எல்லையை விரிவுப்படுத்தியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், தனது 25 வயது ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடனே வழ்ந்ததாக தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“Notes of a Dream: The Authorized Biography of AR Rahman” என்ற தலைப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் சுயசரிதை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் வெளியிட்டு விழா நேற்று முன் தினம் மும்பையில் நடைபெற்றது.
இதில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில் “இந்த நாடு ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளரின் திறமையை அடையாளம் காணும் முன்பு, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியைச் சந்தித்துள்ளேன். ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்துகொள்ள எண்ணினேன். இந்த கடினமான நாட்கள் தான், எதிர்காலத்தில் எதையும் எதிர்கொள்ளும் மனநிலையை உருவாக்கியது. என்னுடைய 25-வது வயது வரை தற்கொலை செய்துகொள்ள எண்ணினேன். என் தந்தையின் இழப்பு இந்த எண்ணத்துக்குக் காரணமாக அமைந்தது. இது ஒருவகையான வெறுமையை என்னுள் தோற்றுவித்தது. இதுவே ஒருவகையில் என்னை அச்சமற்றவனாக மாற்றியது என்று தான் கூற வேண்டும். இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது. எதுவாயினும் அது உருவாக்கப்படும்போதே, அதன் முடிவு எழுதப்பட்டிருக்கிறது.
அப்படியிருக்கையில் எதற்காக அஞ்ச வேண்டும்?. பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோவை கட்டியபிறகு தான் திருப்புமுனை ஏற்பட்டது. அதற்கு முன் செயலற்றுதான் இருந்தேன். என் தந்தையின் இழப்பின் காரணமாக என்னால் அதிக படங்கள் பண்ண முடியவில்லை. 35 படங்கள் எனக்குக் கிடைத்த போது, நான் 2 படங்களுக்குத்தான் இசையமைத்தேன். நீ எப்படி இந்த துறையில் பிழைக்கப்போகிறாய் எனப் பலரும் ஆச்சரியப்பட்டுக் கேட்டனர். உன்னிடம் எல்லாம் உள்ளது; அதைப் பற்றிக்கொள் என்றனர். அப்போது எனக்கு 25 வயது. என்னால் எதையும் செய்ய முடியவில்லை. எனது 12 முதல் 22 வயதில் நான் அனைத்தையும் செய்து முடித்திருந்தேன்.
நான், என் உண்மையான பெயரான திலிப் குமார் என்ற பெயரை வெறுத்தேன்; அது எனக்குப் பிடிக்கவில்லை. ஏன் அதை வெறுத்தேன் என்றும் எனக்குத் தெரியவில்லை. வேறொருவனாக மாற ஆசைப்பட்டேன். உங்களுக்குள் நீங்கள் ஆழமாக இறங்க வேண்டும். உங்கள் மனதின் குரலை கேளுங்கள். அது கடினமானது; இருந்தாலும் இதை ஒருமுறைச் செய்துவிட்டால் நம்மையே மறந்துவிடலாம். நான் என்னுள் ஆழமாகச் செல்ல முடியாமல் போகும் சமயங்களில் அதிகாலை 5 அல்லது 6 மணி அல்லது நள்ளிரவுகளில் பணியாற்றுகிறேன். செய்ததையே செய்து கொண்டிருந்தால் சோர்வுதான் ஏற்படும். புதிதாக எதையாவது செய்யவேண்டும். என்னளவில் பயணம் செய்ய வேண்டும்; குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்கவேண்டும்; நான் அதை பெரும்பாலான நேரங்களில் அதைச் செய்யவில்லை என்றாலும், அது தான் அழகானது; எனக்கு அது மிகவும் உதவுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...