நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசன், தனது அம்மா உடன் மும்பையில் வசித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்ஷரா ஹாசனின், தனிப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரை நிர்வாணத்துடன் அவர் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், இது குறித்து சமூக வலைதளம் ஒன்றில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அக்ஷரா ஹாசன், ”அந்தப் படங்களை பதிவிட்டது யார் என்பது குறித்து, விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக மும்பை காவல் துறையை அணுகி இருப்பதாகவும், இச்சம்பவம் தனக்கு வேதனையை
ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்திருப்பவர், நாடு முழுவதும் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த சூழ்நிலையில், சிலர் அவர்களது அர்ப்ப சுகத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுப்டுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...