ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘இந்தியன்’. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை கொலை செய்யும் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி 22 வருடங்கள் ஆன நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாதியில் கமல் நடிக்க இருக்கிறார். ‘இந்தியன் 2’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஷங்கர் இயக்குகிறார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் வெளியீட்டு பணியில் ஈடுபட்டு இருக்கும் இயக்குநர் ஷங்கர், அப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்.
இந்த நிலையில், ‘இந்தியன் 2’ வில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் ஹீரோயினாக நடிக்க இருந்த நயந்தாரா, நடிக்க மறுத்ததால், அவருக்கு பதில் காஜல் அகர்வாலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...